Sunday, July 26, 2009

Introduction MGR Literature

MGR is a multifaceted person. He was mainly projected by everybody as a mere Tamil movie Actor, who successfully entered Politics and ruled Tamil Nadu for 11 years (1977 to 1987).

This blog will publish the literary works of MGR, which seldom appeared in Newspapers and books.

I have already provided the Literary works of MGR as MGR Book. This blog is entirely dedicated to the literary works of MGR alone.

The literary works include not only writings of MGR, also his speeches (not political) in Schools, colleges and Universities, Functions, Question and Answers, Essays which projects intellectual, cultured, artistic, creative, cultivated reading habits, well informed and knowledgeable personality.

Below is the speech delivered by MGR in front of highly educated people in Chennai Manavazhagar Mandram Muthamil Vizha held in the year 1964. He spoke for two days yes, not two hours. Without any body help and any hints.

The Extract of his speech

வைத்திய நிபுணரிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, அறுத்து விடு என்று கூறுவதற்கும் ஒரு கொலைகாரனிடம் கத்தியைக் கொடுத்து அறத்துவிடு என்பதற்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. இதன் பொருளை இடம், பொருள், ஏவலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அறுத்து விடு என்பது ஒரு கருத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது என்றாலும் வைத்தியனிடம் கொடுக்கப்படும் கத்தி ஒரு குழந்தையின் வாழ்வுக்கு வழி செய்வதாக அமையும். அதே போல, கொலைகாரனிடம் கொடுக்கப்பட்ட கத்தி, ஒன்று மறியாத குழந்தையைக் கொலை செய்யப் பயன்படும் என்ற வித்தியாசம் இருப்பதை உணரலாம். உண்மையான பொருளை ஒரு வார்த்தையில் அடைத்துவிட முடியாது.

அடிமை என்ற சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கலாம். அடிமை என்பவன் பிறருக்கு ஏவலனாக ஆக்கப்பட்டவன் என்றும் கூறலாம். பொதுவாக அடிமை என்பதற்குத் தொண்டு செயல் என்ற பொருளையும் கொள்ளலாம்.

வாழ்வுக்கும் எண்ணத்திற்கும் வரம்பு கட்டி விட்டால், அதையும் அடிமையென்று சொல்லத்தானே வேண்டும்?

கருத்துக்குக் கருத்து விவாதிக்க வேண்டும் அதற்குப் பிறகே ஒரு முடிவைச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, எல்லாம் எனக்குத் தெரியும் என்று ஆட்சிப் பீடத்திலிருப்போர் தம் கருத்தையே சாதித்தால் அது மற்றவரை அடிமைப்படுத்துகிற செய்கைதானே நீதி மன்றத்திற்கு வருவதற்கு முன்னரே, நீதிபதி தீர்ப்பபை எழுதி விடுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இப்படி இருக்கலாமா சுதந்திர நாட்டில்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியாளர் ஆட்சிப் பீடமேறிய பிறகு, மக்களை அடிமையாக அவர்களைப் பலவந்தபடுத்திக் கருத்துக்களைத் திணிக்கின்றனர். இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா?

தொண்டு என்பது விரும்பி ஏற்றுக் கொள்வது, அடிமை என்பது அடிமைகளாக ஆக்கிக் கொள்ளுகிற, அல்லது ஆக்கப்படுகிற நிலை.

கட்சிக்கு அடிமைகளாக்க நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இன்று நாட்டிலே உள்ள நிலைமை இது. ஆட்சியினரிடத்திலே எந்தக் கருத்தை சொல்வதற்கும் அதிகாரம் இல்லாமல் மக்கள் பேசாமலிருக்கிறார்களென்றால், அடிமைத்தனம் என்பதுதான் பொருளே தவிர, அது தொண்டு அல்ல.

நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உன்னத இலட்சியத்திற்கு என்னைத் தொண்டனாக ஆக்கிக் கொண்டவன். நான் விரும்பி ஏற்றுக் கொணட் தலைவன் முன்னால் தொண்டனாக இருக்கிறேன்.

மக்கள் குறைகளை மந்திரிகளிடம் கூற வந்தால், அதைக் கேட்காமல், ஆறுதல் கூடக் கூறாமல் அலட்சியமாக இருப்பது சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமா? ஏழைகள் வாழ்வை ஏற்ற செய்ய வேண்டிய அமைச்சர்கள், அவர்களை மென்மேலும் வாட்டி வதைக்கும் போக்கில் அரசு செலுத்தும் போது, சுதந்திரம் என்பது வெறும் கேலிக் கூத்தென்பது தவிர வேறென்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், மக்களை அடிமைகளாக நினைக்கும் அவல நிலை மாறினாலன்றிச் சுதந்திரம் என்ற சொல்லுக்கு அடிமை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

6 comments:

Unknown said...

nalla muyarchi. puratchi thalaivar emgeeyar oru nadigan mattum alla sirantha paecharal, sirantha yezhuthar-al innum pala, ponmanachemmalin intha parimanangalai thodurthu velieda vendum.

SAILESH said...

Generally the talk of people will be based on their experience from their profession.

But the one who is apart from this is the only and only Revolutionary Leader the world has ever seen or heard. Calling him "Nadamadum Ulagam" will be more apt.

Roop said...

Thank you Sailesh and Selva. I will try to provide more informations.

SAILESH said...

awaiting next post please

Unknown said...

"புரட்சி தலைவர்" எம்.ஜி.ஆரை போல மனித நேயம் நிறைந்த மாமனிதனை பார்க்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். எதிரிகளால் தூற்றப்பட்ட அந்த மாமேதை தனது மனித நேயத்தால் ஆட்சி பீடம் ஏறினார். பொற்கால ஆட்சியை தந்தார். அன்று அவரை தூற்றிய எதிரிகள் இன்று அவரை புகழ்ந்து பேசுவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எம். முஹம்மது ஜாபர் சாதிக்,
வழுத்தூர், தஞ்சை மாவட்டம்.

Roop said...

Thank you Mr.Mohamed Jaffar for your comments.