Thursday, August 20, 2009

Independence Day speech by MGR

This was the speech given by MGR in 14th August 1981 on the eve of Indian Independence day celebration.


This speech was telecasted in Doordarshan and AIR.

சுதந்திர தின விழாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரட்சித்தலைவர் உரை.

நாம் வடுதலை பெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. நாம் விடுதலை பெற்று 34 ஆண்டுகள் ஒடிவிட்டன.

விடுதலை பெற்ற அன்றைக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் நள்ளிரவில் அமரர் பண்டித நேரு அவர்கள் இன்று உலகம் துயில் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் இந்தியா சுதந்திரத்திற்குள் விழித்தெழுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

அமரர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல் தவறுகளுக்காக நாம் வெள்ளைக்காரர்களை குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ இயலாது என்றார்கள்.

என்றைக்கோ எப்போதோ பேசப்பட்ட அவர்களின் வார்த்தைகளை இன்றைக்கும் நினைத்து பார்ப்பதற்கு நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.

நமது விடுதலை போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. தன்னை அதற்கு முன்பாக உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவு அற வழியில், அன்பு வழியில் போராடி ஒரு நாடு விடுவித்து கொண்டதில்லை.

இன்று பட்டொளி வீசி பறக்கிற தாயின் மணிக்கொடியை பார்த்திருக்கிறோம். பரசவமடைகிறோம். ஒங்கி பறக்கிற இந்த கொடியை உயர பறக்க விடுவதற்காக சொந்த பந்தங்களை சொத்து சுகங்களை ஏன் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எத்தனை பேர்.

No comments: