Sunday, August 9, 2009

Thirukural

MGR gave a speech on the Chapter on "Worth of wife" (வாழ்க்கை துணைநலம்) from Thirukural in 1972.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள? என்று ஒரு வினாவைத் தொடுத்து, அதற்கு ஒரு நிபந்தனையாக கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின், என்று விதிவகுத்தார் திருவள்ளுவர். கற்பு என்ற ஒரு சொல்லில் எல்லா நற்பண்புகளுமே அடங்கும் என்ற உண்மையை உறுதிபடுத்தவே கற்பென்னும் திண்மை என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர். பெண் கற்புடன் அதாவது, நற்பண்புகளுடன் விளங்கினால் அவளைக் கைப்பிடித்த ஆண் மகனின் வாழ்வு விளங்கும். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழும் வாழ்வினால், அவர்களின் குடுமப்ம் ஒரு கோயிலாக ஒளி வீசும். அந்த இல்லற ஆலயத்தில் இல்லை, என்ற குறை இராது. இன்பம் பொங்கிப பெருகும். இதனால் இவர்கள் வாழும் ஊர் விளங்கும். இவர்கள் பிறந்த நாடு உயரும். நாட்டில் நல்லறங்கள் செழிக்கும். செல்வம் கொழிக்கும். பெண் என்ற ஒரு சக்தி சமுதாயத்தின் கண் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஆற்றலுடையதாக இருப்பதை உலகம் என்றுமே அறிந்து பாராட்டியுள்ளது. ஆண் அறிவும், ஆற்றலும் நிரம்பப் பெற்றவனாக இருப்பினும். அவனுக்கு வாய்க்கும் பெண் எழிலும், ஏற்றமும் பெற்றிந்தால் மட்டும் போதாது. எல்லா நற்பண்புகளுக்கும், பிறப்பிடமாகத் திகழ்ந்தேயாக வேண்டும். இல்லையென்றால், அதாவது எதிரிடையான குணங்களைப் பெற்றிருந்தால், இருவருடைய வாழ்வுமே பாதிக்கப்படும். இல்லறமும், நல்லறமாக இராது.

திருக்குறள் விழாவில் எம்.ஜி.ஆர். பேசியது - 1972.

2 comments:

Data Miner said...

how simply M.G.R. had explained KURAL.

Unknown said...

azhagana vilakam.