Sunday, August 2, 2009

Question and Answers Part I

வேள்வி பதில் பகுதி

Look at the questions asked by his fans and as well as from others. How MGR has answered it. The first question is about the difference between Politics and Arts (Cinema here) and how MGR had given the definition clearly.

(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.

(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?

எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.

(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?

எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.




The above questions about the legendary figures of Tamilnadu politics. MGR has equated their character, Rajaji for Sea and Periyar to the Banyan Tree.

Though fourth question was asked 40 years ago the same condition is still prevailing in Tamil Nadu.

(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?

எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.

Fifth answer gives advice to everybody and also to me.

(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?

எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.

Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.

(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?

எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.

(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.

Image of Rajai and Periyar taken from Wikipedia, the question and answers appeared in Samaneedhi.

1 comment:

Unknown said...

well selected questions. keep up the good work.